Skip to main content

முதல் விக்கெட்டைப் பதிவு செய்தார் நடராஜன்!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Natarajan

 

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான நடராஜன் இப்போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமாகிறார். டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தனர்.

 

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. துவக்க வீரராகக் களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே விக்கெட்டை வீழ்த்தி, தன்னுடைய முதல் சர்வதேச விக்கெட்டைப் பதிவு செய்தார் நடராஜன். அவர் வீசிய பந்து மார்னஸ் லாபுசாக்னே பேட்டில் பட்டு ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.