Skip to main content

"எனது நாட்டிற்காக முதல் வெற்றி' -நடராஜன் நெகிழ்ச்சி! 

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
natarajan

 

 

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் போட்டித்  தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலாவது இருபது போட்டியில் இந்திய அணி வெற்றபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய வென்றதோடு, தொடரையும் கைப்பற்றியது. 

 

இப்போட்டியில், மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியபோது, நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதுபெற்ற ஹர்திக் பாண்டியா, இந்த விருதை நடராஜன் தான் பெறுவார் என நினைத்ததாக குறிப்பிட்டார்.

 

நடராஜன் அறிமுகமான முதல் தொடரிலேயே, இந்திய அணி அத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இவ்வெற்றியைத் தொடர்ந்து, நடராஜன் ட்விட்டர் பக்கத்தில், தனது  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுத்தொடர்பாக அவர், "எனது நாட்டிற்காக முதல் 'சீரிஸ்' வெற்றி. மறக்கமுடியாத  மற்றும் ஸ்பெஷலான ஒன்று" எனக்   கூறியுள்ளார்.