Skip to main content

நம்ம ‘தல’ தோனி டக் அவுட்டா? விரக்தியடைந்த இளம் ரசிகர்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

அனைத்துப் பந்து வீச்சாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மிக ஆபத்தான வீரர் மற்றும் சிறந்த ஃ பினிஷர் எம்.எஸ்.தோனி. எல்லா நிலைகளிலும் தன்னை நிறுபித்திருக்கிறார். ஆசியக் கோப்பையில் இவருக்கு இணை இவர் மட்டும் தான் என்று கூற வேண்டும். 2016-ஆம் ஆண்டு இந்தியா ஆசியக் கோப்பையை வென்றது தோனி தலைமையில்தான். நேற்றையப் போட்டிக்கு முன்பு வரை, ஆசியக் கோப்பையில் தோனியின் சராசரி 18 ஆட்டங்களில் 102 ஆகும். தோனி ஒரு ஃ பினிஷராக களமிறங்கி இந்த சராசரியை  தக்க வைத்து கொள்வது  வேறு யாராலும் இயலாத ஒன்று. தோனி ஃ பினிஷராக களம் கண்டு தனது திறமையான பேட்டிங் மூலம் அணியை வெற்றிக்கு கொண்டு செல்கிறார். ஆசியக் கோப்பையில் விளையாடும் எந்த வீரரும் தோனியை விட அதிக பேட்டிங் சராசரியை கொண்டு இருக்கவில்லை. 

 

dh


 

சமீப காலமாக, ஒரு நாள் போட்டிகளில் தோனி ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க முடிந்திருக்கவில்லை. இருப்பினும் ஐபிஎல் போட்டியில் அவர் பிரகாசமான செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இங்கிலாந்தில், அவரது செயல்திறன் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அவருடைய மெதுவான ஸ்ட்ரைக் ரேட் பார்வையாளர்களை கூட ஆச்சரியப்பட வைத்தது. ஆசியக் கோப்பையில் கடந்த ஏழு இன்னிங்ஸ்களில் தோனி 213.21 ஸ்ட்ரைக் வீதத்தை எடுத்துள்ளார். இதனால் இந்த ஆசிய போட்டியில், அவர் தனது பேட்டிங் திறமையால் விமர்சகர்களை அமைதிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று சொல்ல வேண்டும்.

 
எம்.எஸ். தோனி 'டக் அவுட்' ஆவது அரிதான நிகழ்வு. அவருடைய 275 இன்னிங்ஸில், 9 முறை மட்டுமே டக் அவுட்டில் வெளியேறியுள்ளார். நேற்று ஹாங் ஹாங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் சந்தித்த 3-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனியின் அவுட்டை சற்றும் எதிர்பாராத ஒரு இளம் இந்திய ரசிகர், விரக்தியில் மைதானத்தில் செய்த செயல் கேமராவில் பதிந்தது. தல தோனியின் அவுட்டை பொருட்படுத்த முடியாத அந்த இளம் ரசிகர், தாங்க முடியாத துயரத்தில் செய்வதறியாது தவித்தார்.