Skip to main content

"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்" மைக்கேல் வாகன் பேச்சு 

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Michael Vaughan

 

 

அடுத்த ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்ய நிறைய அணிகள் முயற்சிக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 13-ஆவது ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடிக்கு பெயர் பெற்ற மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் படுசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, அடுத்தாண்டு அவர் பஞ்சாப் அணியில் தொடர்வது சந்தேகமே என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

 

ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இத்தொடரில் யாரும் எதிர்பாராத வண்ணம் மேக்ஸ்வெல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "உலகில் எந்த ஒருநாள் போட்டி அணியும் மேக்ஸ்வெல் போன்ற வீரர் தங்கள் அணிக்கு வேண்டாம் என்று நினைக்கமாட்டார்கள். அடுத்த ஐபிஎல் ஏலத்தின் போது அவரை எடுக்க பல அணிகள் முயற்சிக்கும். ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லிற்கு சரியான இடத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இனி 7-ஆவது இடத்திற்கு முன்னதாக அவரை அனுப்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கடைசி 15 ஓவர்களில் அவரது தேவை என்ன என்பதை தற்போது கண்டுணர்ந்துள்ளார்கள்" எனக் கூறினார்.