Skip to main content

ஐ.பி.எல். கிரிக்கெட்- சென்னை அணி த்ரில் வெற்றி!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

IPL Cricket- Chennai team wins!

 

அபுதாபியில் இன்று (26/09/2021) மாலை நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. 

 

அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து த்ரில் வெற்றிப் பெற்றது. 

 

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவி புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில உள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. 

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.