Skip to main content

2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - ஐசிசி அறிவிப்பு

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

smiriti mandhana

 

இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா, 2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஸ்மிருதி மந்தனா,  கடந்த ஆண்டில் 22 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஐந்து அரைசதத்தோடு 855 ரன்களைக் குவித்திருந்தார்.

 

ஸ்மிருதி மந்தனா, ஓர் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாகவும் ஸ்மிருதி மந்தனா தேர்தெடுக்கப்பட்டிருந்தார்.

 

ஸ்மிருதி மந்தனாவுக்கு முன்பாக, ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.