Skip to main content

என்னை உருவாக்கியதில் முக்கிய பங்கு நடாலுக்கு உண்டு! - ரோஜர் ஃபெடரர்

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

நான் இன்று ஒரு சிறந்த டென்னிஸ் வீரர் என்று அழைக்கப்படுவதற்கு ரஃபேல் நடால் முக்கியக் காரணம் என ரோஜர் ஃபெடரர் தெரிவித்திருக்கிறார்.

 

Fede

 

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பல சாதனைகளைப் படைத்துவருகிறார். ஆக்ரோஷமும் சாதுர்யமும் கலந்த இவரது ஆட்டத்திற்கு, ஈடுகொடுத்து ஆடக் கூடியவர் ரஃபேல் நடால். மூட்டுப்பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஆறுமாதம் ஓய்வெடுத்துவிட்டு வந்த ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாதனை படைத்தார்.

 

இந்நிலையில், லாரியஸ் விருதுவழங்கும் விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கம்பேக் மற்றும் விளையாட்டுவீரர் என்ற இரண்டு விருதுகளைப் பெற்ற ஃபெடரர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது, ‘என் போட்டியாளர் ரஃபாவுக்கு (ரஃபேல்) நன்றி. நான் அவரை வாழ்த்த நினைக்கிறேன். இது அவருக்கு மறக்கமுடியாத வருடமாக இருக்கும். எங்களுக்குள் மிகப்பெரிய போட்டி இருந்தது மற்றும் ரஃபேலால் தான் நான் சிறந்த வீரராக உணர்கிறேன். இங்கு இந்த விருதோடு அவரும் நின்றிருக்கலாம். ஏனெனில், அவர் ஒரு திறமையான வீரரும், நண்பரும் ஆவார்’ என தெரிவித்துள்ளார்.

Next Story

கண்ணீருடன் டென்னிஸிலிருந்து விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

Roger Federer loses final competitive match of his career at Laver Cup 2022

லண்டனில் நடந்த லேவர் கோப்பை தொடருடன் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் களத்தில் இருந்து விடை பெற்றார். 

Roger Federer loses final competitive match of his career at Laver Cup 2022

ஐரோப்பிய அணியில் இடம் பெற்றிருந்த ரஃபேல் நடாலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரரும் இணைந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சாக்- பிரான்ஸஸ் டியோபோ இணையுடன் மோதியது. ஆடவர் இரட்டை போட்டியாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்ப செட்டை நடால் இணை 6-4 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தினர். ஆனால் அடுத்த செட்டை கவனமுடன் விளையாடிய அமெரிக்க இணை 7-6 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தியது. இதனால் இறுதி செட்டில் விறுவிறுப்பு கூடிய நிலையில் ஆட்டம் வெகு நேரம் நீடித்தது. இறுதியில் 9-11 என்ற கணக்கில் ஃபெடரர்- நடால் இணை போராடி தோல்வி அடைந்தது. 

Roger Federer loses final competitive match of his career at Laver Cup 2022

கடைசி போட்டியில் விளையாடிய பின் பேசிய ஃபெடரர், தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர் ரஃபேல் நடாலும், ரசிகர்களும். 

e434

ரஃபேல் நடாலுடன் இணைந்து கடைசிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

தன் சாதனையை சமன் செய்த நடாலை வாழ்த்திய ரோஜர் ஃபெடரர்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

Roger Federer

 

 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடாலும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், போட்டியின் முடிவில் மூன்று செட்டுகளை 6-0, 6-2, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். ரஃபெல் நடால் வென்றுள்ள மொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனை ரஃபெல் நடாலால் சமன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஜர் ஃபெடரர், நடாலுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் அவர், "நடால் மீது தனிநபராகவும், சாம்பியனாகவும் மிகுந்த மரியாதை எனக்கு உண்டு. நீண்ட காலமாக எனது போட்டியாளர். எங்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டிதான் சிறந்த வீரராக எங்கள் இருவரையும் மாற்றியிருக்கிறது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதற்காக அவரைப் பாராட்டுவது எனக்கு மிகப்பெரிய மரியாதை. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது தொடரும் எங்கள் பயணத்தின் கூடுதலான ஒரு அடி என்று நம்புகிறேன். வாழ்த்துகள் நடால். நீங்கள் இதற்கு தகுதியானவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.