Skip to main content

"ரொம்ப கஷ்டமா இருக்குயா" - புதுக்கோட்டை சிறுமி விவகாரத்தில் ஹர்பஜன் வேதனை...

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

harbhajan singh about puthukottai issue

 

புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், "செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.