Skip to main content

மனரீதியிலான பிரச்சனை... ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய மேக்ஸ்வெல்லின் முடிவு...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

 

glenn maxwell announces break from cricket

 

 

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வரும் அவர், தற்போது திடீரென தொடரிலிருந்து விலகியுள்ளார்.  ஆனால் இதற்கான காரணம் என்ன என வெளியிடப்படாத நிலையில் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியில் உளவியல் ஆலோசகர் மைக்கேல் லாயிட், " மேக்ஸ்வெல் மனநலம் தொடர்பாக அவர் சந்தித்த சிரமங்கள் காரணமாக தற்காலிக ஓய்வை அறிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் தனது மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சில சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். இதன் விளைவாக, அவர் விளையாட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்புகிறார். இந்த சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்யும் முயற்சிகளில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என தெரிவித்துள்ளார். மேக்ஸ்வெல்லின் இந்த திடீர் அறிவிப்பால் கவலையடைந்துள்ள அவரது ரசிகர்கள், சமூகவலைதளங்களில் அவர் விரைவில் நலம்பெற வாழ்த்தி வருகின்றனர்.