Skip to main content

முதல் 50 கொஞ்சம் லேட், அடுத்த 50 வெறும் 16 பந்துகளில்... இந்திய மகளிர் கிரிக்கெட்டரின் சாதனை...!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018


கயானாவில் 9-ஆம் தேதி நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் எனும் வீராங்கனை சதம் அடித்தார். இவர் அடித்தது சதம் மட்டும் அல்ல இவர் அடித்த இந்த சதத்தின் மூலம் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையும் அடங்கியுள்ளது. 

 

 

ii

 

மேற்கிந்தியத் தீவுகளில் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. கயானாவில் 9-ஆம் தேதி நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்து, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

 

 

ll

 

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் 33 பந்துகளில் அரை சதத்தையும், 49 பந்துகளில் சதத்தையும் அடித்தார். முதல் 33 பந்துகளில் அரை சதம் அடித்த கவுர், அடுத்த 16 பந்துகளில் மற்றொரு அரை சதத்தை அடித்து தனது முதல் மற்றும் மகளிர் இந்திய அணியின் முதல் சதத்தையும் பதிவு செய்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ரோட்ரிக்ஸ் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஹர்மன்பிரீத் கவுர் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசினார்