Skip to main content

கேமரூன் ஒயிட் கழுத்தில் பாய்ந்த பீமர்! - அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள் (வீடியோ)

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
Beemer

 

 

 

பொதுவாக களத்தில் அதிரடி காட்டும் வீரர்களை மிரட்டுவதற்காக பீமர் பந்துகளை பந்துவீச்சாளர்கள் வீசுவர். பீமர் என்றால் பவுலரின் கையில்ல் இருந்து ரிலீஸாகும் பந்து, நேராக பேட்ஸ்மேனின் முகத்தைக் கடந்து செல்லும் பந்துவீச்சு முறை என்று சொல்லலாம். காலப்போக்கில் கடுமையான பாதுகாப்பு விதிகள் நடைமுறைகள் அமலுக்கு வந்தவிட்ட நிலையில், பீமர் பந்துகளை பெரிதும் பார்க்க முடிவதில்லை. 
 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கி ஜே.எல்.டி. கோப்பை தொடரின் தொடக்கப் போட்டியில், விக்டோரியா மற்றும் குவீன்ஸ்லாந்து அணிகள் மோதின. விக்டோரியா அணியின் சார்பில் கேமரூன் ஒயிட் களமிறங்கினார். ஸ்டான்லேக் ஓடிவந்து பந்தைவீச, அவரது கையிலிருந்து நழுவிய பந்து நேராக ஒயிட்டின் கழுத்தில் பாயந்தது. பந்து பட்ட வேகத்தில் ஒயிட்டும் சுருண்டு விழுந்தார். 
 

 

 

எதிரணி வீரர்கள் வேகமாக ஒயிட்டை நோக்கி ஓடிவர, தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு எழுந்துநின்றார். இருப்பினும், விக்டோரியா அணியின் ஃபிஸியோக்கள் வந்து சோதித்துவிட்டுச் சென்றனர். இதனால், சிறிது நேரம் களத்தில் அமைதியும், பரபரப்பும் நிலவியது. இதேபோன்ற கவுண்டி போட்டியொன்றில் ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹுயூக்ஸ் பந்து தலையில் பட்டதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.