Skip to main content

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் மாற்றம்... இளம் வீரரிடம் பொறுப்பு ஒப்படைப்பு!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

Pakistan

 

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டிசம்பர் மாதம் நியூஸிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில், பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

 

அசார் அலியிடம் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பானது, தற்போது பாபர் அசாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக இருந்துவந்த பாபர் அசாம், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பையும் ஏற்றதையடுத்து, மூன்று தரப்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை ஏற்ற இளம் வீரரானார்.