Skip to main content

நாளை துவங்குகிறது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்! 

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Australian Open tennis starts tomorrow!
கோப்புப் படம் 

 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ரூ. 405 கோடி பரிசுத் தொகை கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இத்தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர், ஸ்வெரவ், சிட்சிபாஸ், மெத்வதேவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா, ஆஸ்லி பார்ட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ. 23. 75 கோடியும், இரண்டாவது இடம் வென்றால் ரூ. 11.75 கோடியும் பரிசுத் தொகை கிடைக்கும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் முதல் சுற்றில் வென்றாலே வீரர்களுக்கு ரூ. 40 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.