Skip to main content

ஏழாவது ஆசியக் கோப்பையை வெல்லுமா இந்திய அணி?

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
Dhoni

 

 

 

இன்றுடன் 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் முடிவுக்கு வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருக்கும் இந்தப் போட்டியில், யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய பெரிய அணிகளும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய சிறிய அணிகளுமாக ஆறு அணிகள் இந்தத் தொடரில் களமிறங்கின. இரண்டு பிரிவுகளாக தொடங்கிய தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் தோற்று வெளியேறியது இலங்கை அணி. முதல் சுற்றில் ஹாங்காங் அணியும் வெளியேற மீதமுள்ள நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன. ஒவ்வொரு அணியும் தலா மூன்று போட்டிகளை இதில் எதிர்கொள்ள வேண்டும். இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளிடம் வெற்றிபெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியும் வங்காளதேசத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. இதன்மூலம், இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுவது உறுதியானது. 
 

 

 

இதற்கு முன்னர் ஆறு முறை ஆசிய கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி. சென்ற ஆண்டு டி20 தொடராக நடைபெற, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்திய அணி அந்தப் போட்டியில் சுலபமாக வெற்றிபெற்றது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் இந்திய அணி ஆறாவது கோப்பையை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. அதேசமயம், வங்காளதேசம் அணி இதுவரை இரண்டு முறை ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது. இந்நிலையில், கோப்பையை வெல்லும் முனைப்போடு அந்த அணி களமிறங்குகிறது.