Skip to main content

செல்லமாக வருடிய தோனி.. ராயல் சல்யூட் அடித்த ராணுவ நாய்! (வீடியோ)

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

மைதானத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த ராணுவ நாய் தோனிக்கு சல்யூட் அடிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

Dhoni

 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றிபெற்றது.

 

போட்டி முடிந்ததும் சென்னை அணியின் கேப்டன் தோனி, மைதானத்தில் பாதுகாப்பிற்காக இருந்த நாயினை செல்லமாக வருடினார். சில நிமிடங்கள் தோனி அந்த நாயை வருடிய பிறகு, அந்த நாயின் பராமரிப்பாளர் விடுத்த கட்டளைக்கு இணங்க தோனிக்கு ராயல் சல்யூட் அடித்தது. அதேபோல், நாயின் பராமரிப்பாளரும் தோனிக்கு சல்யூட் அடித்தார். 

 

 

மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கலோனல் பதவி வகித்து வருகிறார். நாய்களுடன் செல்லமாக பழகும் அவர், சென்னை அணியின் ரீஎண்ட்ரி குறித்த அறிவிப்பை, தன் வீட்டு நாயுடன் கெத்தாக இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.