Skip to main content

"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

akash chopra about backlash received from dhoni fans

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட டி20 உலகக்கோப்பை விருப்ப அணியில் தோனியின் பெயர் இல்லாததால், இந்திய ரசிகர்கள் ஆகாஷ் சோப்ராவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, அண்மையில் டி20 உலகக் கோப்பைக்கான தனது விருப்ப அணியை அறிவித்தார். 14 பேர் கொண்ட இந்த அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ராகுல் மற்றும் ரிஷப் பந்தை அவர் தேர்வு செய்திருந்தார். மேலும், இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆகாஷ் சோப்ராவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, "நான் கடந்த ஓரிரு நாட்களாக எனது சமூகவலைத்தள கணக்கை மூடிவிட்டேன். ரசிகர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி வருகிறார். அவர்கள் என் குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. நான் அவ்வாறு கூறியதற்குத் தயவு செய்து என்னை மன்னியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.