Skip to main content

6 பந்துகளில் 6 சிக்ஸர்; பாகிஸ்தான் வீரர் சாதனை

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

6 sixes off 6 balls; Pakistan player record

 

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இஃப்திகார் அகமது சாதனை படைத்துள்ளார்.

 

பாகிஸ்தானில் வரும் 13 ஆம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்க உள்ளது. இந்நிலையில் பாபர் அசாமின் பெஷாவர் ஷல்மி அணியும், சர்ஃபராஸ் அகமதுவின் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் நேற்று நட்பு ரீதியிலான ஆட்டத்தில் மோதின. 

 

இதில் முதலில் பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 184 ரன்களை எடுத்தது. 19 ஓவர்களில் அந்த அணி மொத்தமாக 148 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசி இஃப்திகார் அகமது ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 50 பந்துகளில் 94 ரன்களை குவித்தார். இஃப்திகார் அகமது 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கும் வீடியோ பதிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

 

இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய பெஷாவர் ஷல்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களை மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பெஷாவர் ஷல்மி அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் 53 ரன்களையும் பாபர் அசாம் 23 ரன்களையும் எடுத்தனர்.