8 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் நிசன்கா 40 ரன்களும் அசலன்கா 38 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க், அகார் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.
158 ரன்கள் இலக்கைக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஆரோன் ஃபின்ச் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்துக் கொண்டு இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டோனிஸ் 18 பந்துகளில் 59 ரன்களை குவிக்க ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 18 பந்துகள் ஆடிய ஸ்டாய்னிஸ் 6 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடித்து 327.78 ஸ்ட்ரைக் ரேட் உடன் ஆடினார்.
ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார்.