Skip to main content

புகைப்பழக்கத்தை நிறுத்த மொபைல் ஆப்

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

புகைபிடிப்பதை நிறுத்துவதற்காக ஐ.ஐ.டி கரக்பூர் புதிதாக ஆப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. புகைபிடிப்பவர்கள் எப்போதெல்லாம் புகைபிடிக்க முற்படுகிறார்களோ அப்போதெல்லாம் இந்த ஆப் அவர்களுக்கு, புகைபிடிப்பதால் அவர்களின் ஆயுள் எவ்வளவு குறைபும், என்ன மாதிரியான உடல்நிலை குறைவு ஏற்படும் போன்ற எச்சரிக்கை செய்திகளை அனுப்பும். 

 

s

 

 

மொபைல் மூலமாக உபயோகிக்கக்கூடிய இந்த ஆப், முதலில் புகைபிடிப்பவரின் தரவுகளை சேகரித்துக்கொண்டு அதன் அடிப்படையில் அவர் பிடிக்கும் சிகிரெட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவரின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப் உபயோகப்படுத்துபவர் புகைபிடிக்க முற்பட்டால் அவரின் வீட்டிற்கோ, நண்பர்களுக்கோ அல்லது மருத்துவருக்கோ அவர் புகைக்கிறார் எனும் செய்தி போகும். அதனால், அவர் எளிதில் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.