Skip to main content

உணவு முறை மாற்றத்தால் டயாபட்டீஸ் அளவு குறையுமா?- ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Kirthika Tharan | Nutrition | Diebetes | Heavyfood |

உணவு முறை மாற்றம் வைத்தே டயாபிடிக் அளவை குறைத்தது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

டயாபிடிக் பேஷன்ட் ஒருவர்  என்னிடம் வெளிநாட்டிலிருந்து வந்து சிகிச்சை எடுத்து கொண்டார். 100 யூனிட் அளவில் தினசரி என்று 20 வருடமாக இன்சுலின் எடுத்து வந்திருந்தார். அது கூடவே மாத்திரையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பார்த்துக் கொண்டிருந்ததோ ஐ. டி. வேலை. சுமார் ஒரு நாளைக்கு  12லிருந்து 14  மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் வேலை. 

தூங்கும் நேரம் தவிர மீத நேரம் முழுக்க உட்கார்ந்தே தான் இருப்பார். ஆனால் அவருக்கு வேறு ஏதேனும் மனக் கவலையோ அல்லது ஸ்ட்ரெஸ் எதுவுமே கிடையாது. ஆனால் 100 யூனிட் அளவு இன்சுலின் எடுப்பது மட்டுமே சிக்கல். என்ன செய்யலாம் என்று பார்க்கும் பொழுது முதலில் அவரது உணவு முறையை பார்த்தோம். அவர் நல்ல ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தார்.  திடீரென்று அவரை ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதற்கு பதில் ஸ்நாக்ஸ் வகைகளில்  மாற்றம் மட்டும் செய்தேன். 

அவருக்கு பிரீ பையாடிக் மற்றும்  ப்ரோ பயோடிக் சாலட் கூடவே நிறைய ஸ்மூத்திகள், கிரீன் ஜூஸ் சர்க்கரை சேர்க்காமல் கொடுக்கப்பட்டது. அவர் சைவம் என்பதால் முட்டையும் சாப்பிட முடியாது. அதனால் முட்டைக்கு பதிலாக ஸ்ப்ரவுட்ஸ் நிறைய கொடுக்கப்பட்டது. இந்த கட் மைக்ரோபியத்திற்கும், டயாபட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. நம் உடலில் 100 டிரில்லியன் மைக்ரோப்ஸ் உள்ளது. அது 30 வகையான கார்போஹைட்ரேட்சை செரிக்கக் கூடியது. 

ஒரு சில முளை காட்டிய பயிர்கள் சுகர் அதிகப்படுத்தும். ஒரு சில முளை கட்டிய பயிர்கள் சுகரை குறைக்கும். ஒவ்வொரு உடல்வாகிற்கும் அவர்கள் உடம்பில் இருக்க கூடிய மைக்ரோபியம் அளவை பொறுத்து அவர்களுடைய மெட்டபாலிசம் மற்றும் டயாபட்டிக் போன்ற அளவுகள் மாறுபடும். எனவே அவருடைய சுகர் அளவை மானிட்டர் செய்து அதற்கு ஏற்ப கொடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவர் சுகர் மானிட்டர் சார்ட் எனக்கு அனுப்பப்பட்டதால், எந்த உணவு எந்த அளவு சுகர் அவருக்கு அதிகப்படுத்துகிறது என்று கவனித்து பார்க்க வசதியாக இருந்தது. எனவே நாங்கள் ஒவ்வொரு வகையான உணவையும் அவரின் சுகர் அளவு மாற்றம் வைத்து சார்ட் பிரிப்பேர் பண்ணி உணவு பழக்கத்தை முழுவதுமாக மாற்றினோம்.  நம்பவே முடியாத அளவுக்கு 15 நாட்களில் இன்சுலின் 100 யூனிட்டில் இருந்து ஜீரோவாக குறைந்தது. அதன் பின்னர் முழுக்க மாத்திரையிலேயே எடுத்துக் கொண்டு,  அதன் பிறகு இன்னும் சீக்கிரமாகவே மாத்திரையும் நிறுத்தப் பட்டது. 

20 வருடமாக இன்சுலினை உடலில் செலுத்துபவர்களுக்கு இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிலர் சிரமப்படலாம். அதனால் ஆரம்பத்திலேயே கவனித்து உடனடியாக சரி செய்வது எளிது. அப்படி சரியான உணவு மாற்றம் செய்தாலும் மருத்துவரை பார்த்தாலும் உணவு முறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறதா என்று அவ்வப்போது (FBS) மானிட்டர் மூலம் செக் செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று மாறிவரும் சிகிச்சை முறையில் நிறைய வசதிகள் இருக்கிறது. எனவே டயபேட்டிக்கை கட்டுக்குள் வைப்பது சுலபம். 90% டயபடிக் மக்கள் சரியான உணவு மற்றும் வாழ்வியல் மாற்றம் எடுக்கும் போது வெளியே வந்துவிடலாம். ஆனால் 10% மக்கள் என்ன செய்தாலும் மாத்திரையில் இருந்து அவர்களால் வெளிவர முடியாது. ஆனால் சரியான கவனிப்பால் மாத்திரையின் அளவை அதிகப்படுத்தாமல் இருக்க முடியும். டயாபிடிக் ப்ரோக்ராம் பொருத்தவரை ட்ரீட்மெண்ட் ப்ரோக்ராம் கிடையாது. அது ஒரு  லேர்னிங் ப்ரோக்ராம் மட்டுமே. ட்ரீட்மென்ட் எடுப்பதை விட உங்கள் டயாபட்டிக்கை  நீங்களே  மானிட்டர் செய்து எந்த உணவு எந்த அளவு உடலில் மாற்றம் கொடுக்கிறது என்று ஒரு முறை நீங்களே கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுக்க எடுக்கும் உணவில் நீங்களே சுதாரித்து சரியானதாக எடுத்துக் கொள்ள முடியும்.