Skip to main content

"சிறந்த காலை உணவு என்ன தெரியுமா?" - மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் பேட்டி

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

"Do you know what is the best breakfast?"- Doctor CK Nanthagopalan Interview!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நாம் 800 கோடி பேர்தான் உலகத்தில் இருக்கிறோம். உலகம் நம்முடையது இல்லை. இந்த உலகம் நுண் கிருமிகளுடையது. அதை அளவிடவே முடியாது. ஒரு சில நுண் கிருமிகள் இரும்பை உணவாக சாப்பிடுகிறது. அந்த கிருமிகளின் கழிவு காப்பர். மனிதக் கழிவில் தங்கம் எடுக்கலாம். காப்பரை அப்படியே விட்டுவிட்டால், ஐந்து அல்லது ஆறு லட்சம் வருடங்களுக்குப் பிறகு தங்கமாக மாறும். ஒவ்வொரு உலோகமும், இந்த உலகத்தில் நுண் கிருமிகளால் படைக்கப்படும் பொக்கிஷங்கள். 

 

லெட்டை பஸ்ப்பமாக்கி, அதைச் சாப்பிட்டால் உன்னுடைய மலத்தில் தங்கத்தைப் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டுக்கு அருகே உள்ள ஜுன்னா காட்டில் ஆயுர்வேத பல்கலைக்கழகம் உள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் ஒரு வருடத்திற்கு முன்பு கிர் பசு யூரினில் தங்கம் உள்ளதாகத் தெரிவித்தனர். இந்தப் பசுவின் பால் ஒரு லிட்டர் ரூபாய் 3,000 ஆகும். 

 

பழைய சோறு மிகப்பெரிய டெக்னாலஜி. பழைய சோற்றை ஆராய்ச்சி செய்து, அதில் என்னென்ன ஊட்டச்சத்து உள்ளது என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இதை இணையதளம் மூலம் நீங்கள் படிக்கலாம். பழைய சோறு சாப்பிடுவது நல்லது; ஆனால் சற்று மந்தமாக இருக்கும். ஆனால், உடல் உழைப்பில் இருப்பவர்களுக்கு அது தெரியாது. சாதம் சட்டியில் வடித்திருக்க வேண்டும். மீதமிருக்கும் சாப்பாடு சட்டியிலேயே இருக்க வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் சாப்பிடலாம். 

 

நவதானியம் சிறந்த உணவு ஆகும். ஆனால், அதை உடனடியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நாம் பழகவில்லை. பிறந்ததில் இருந்து 21 வயது வரைக்கும் நாம் என்ன உணவைச் சாப்பிட்டோமோ, அதையே சாப்பிடலாம். வாரத்திற்கு ஒருநாள் மட்டும் நவதானிய உணவைச் சாப்பிடலாம். ஆனால், தற்போது மூன்று வேளையில் தினை, சாமை, அரிசி உள்ளிட்டவையைச் சாப்பிடுகிறார்கள். சிறுதானிய உணவு நல்லவைதான். அதை எப்படி கையாள வேண்டும் என்ற முறையில் நாம் தவறுகிறோம். வாரத்தில் ஒருநாள் மட்டும் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். 

 

நமக்கு தாகம் எடுத்தால் தண்ணீரைப் பருகலாம். இந்த அளவுக்கு குடிக்க வேண்டும் என்பதில்லை. காலை உணவு மிக முக்கியம். சிறந்த காலை உணவு என்ன தெரியுமா? தேங்காய் ஒரு மூடியில் 1/4 பகுதி, ஒரு கிண்ணம் அவல், ஒரு துண்டு வெள்ளம், இரண்டு மஞ்சள் வாழைப்பழம். இதுதான் தலைசிறந்த உணவு". இவ்வாறு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.