Skip to main content

பிசிஓடி பிரச்சனை வந்தால் குழந்தை பிறக்காதா?

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

Can PCOD cause infertility?

 

பிசிஓடி என்ற மாதவிடாய் சிக்கல் வந்தால் குழந்தை பிறக்காது என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமான உண்மை என்ற கேள்வியை டாக்டர் கிருத்திகா அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த விவரம் பின்வருமாறு...

 

பிசிஓடி  பிரச்சனை வந்தால் குழந்தை பிறக்காது என்பது உண்மை இல்லை. இது மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது தான் நீங்கள் செய்ய வேண்டியது. மருத்துவரை அணுகினால் உங்கள் உடல்வாகு என்ன, குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது பற்றித் தெளிவாக விளக்குவார். 

 

மன அழுத்தம் பல்வேறு ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது. நல்ல தூக்கம் என்பது மிக அவசியம். ஆனால் இன்று நம்முடைய பிள்ளைகள் செல்போனை அதிக நேரம் பார்த்துக்கொண்டு மிகச் சில மணி நேரங்களே தூங்குகின்றனர். ஒவ்வொருவருக்கும் இரவு 9 மணிக்கு மேல் மெலடோனின் சுரக்க ஆரம்பிக்கும். அப்போதே தூங்கி விடுவது நல்லது. தூக்கம் பாதிக்கப்படும்போது கார்டிசால் என்கிற மன அழுத்தத்திற்கான ஹார்மோன் பாதிக்கப்படுகிறது.