Skip to main content

காதலித்து ஏமாற்றிய இளைஞனை பழிவாங்க காதலனின் தந்தையை கரம்பிடித்த இளம்பெண்!  

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

A young girl who is caught by her lover's father to take revenge on the young man who cheated on her

 

காதலித்து ஏமாற்றிய இளைஞனை பழிவாங்க இளம்பெண் காதலனின் தந்தையை கரம் பிடித்த சம்பவம் நியூயார்க்கில் நிகழ்ந்துள்ளது.

 

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் அகஸ்டா ஹப்பில். இவர் தனக்கு நேர்ந்த காதல், துரோகம், பழிவாங்கும் கதைகளை சமூக ஊடகங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அகஸ்டா ஹப்பிள் வெளியிட்ட தகவலில், 'எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய 16 வயதிலேயே 30 வயதான ஜேம்ஸ் என்பவரை காதலித்தேன். ஜேம்ஸும் என்னை காதலிப்பதாக கூறினார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எங்களது காதல் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் சில நாட்கள் கழித்து ஜேம்ஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை, எனது ஃபோனையும் அவர் எடுக்கவில்லை. இதனால் அவர் என்னை ஏமாற்றுவது எனக்கு நன்றாக தெரிந்தது.

 

இதனால் காதலில் கசப்பு ஏற்பட்டது. சில நாட்கள் கழித்து ஜேம்ஸை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னை மன்னிக்கும் படியும், என்னை ஏற்றுக் கொள்ளும் படியும் கூறினார். நானும் திருந்திவிட்டார் என அதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால் மீண்டும் அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இப்படி தொடர்ந்து காதலிப்பதாக கூறி என்னை ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்த நான் அவருக்கு தக்கபாடம் புகட்ட நினைத்தேன். இதற்காக ஜேம்சின் தந்தையை என் நட்பு வளையத்திற்குள் கொண்டு வந்து அவரிடம் பழகி காதலிக்கவும் தொடங்கினேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் ஒப்புக்கொண்டதால் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக உள்ளேன். தற்போது எனது ஐந்தாவது திருமண நாளை கொண்டாடி வருகிறேன்' என தெரிவித்துள்ள அகஸ்டா ஹாப்பில், காதலித்து ஏமாற்றிய ஜேம்ஸின் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பகீர் கிளம்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்