Skip to main content

அமைச்சர்களைக் குறிவைத்து தாக்குதல் - 30 பேர் பலி!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

yemen

 

 

ஏமன் நாட்டில் புதிதாக உருவாகியுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அண்டை நாடான சவுதி அரேபியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பியதும், அவர்களைக் குறி வைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.

 

சவுதி அரேபியாவிலிருந்து ஏமன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் வந்த விமானம் தரையிறங்கியதும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் பலியானோதோடு, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 

இந்த தாக்குதலில் அமைச்சர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்று அறிவித்துள்ள ஏமன் அரசு, ஹவுத்தி மிலிட்டா என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இந்த அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்