Skip to main content

உலகின் மூத்த காண்டாமிருகம் உடல்நலக் குறைவால் மரணம்!

Published on 30/12/2019 | Edited on 31/12/2019

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு சிறப்பான விஷயம் மற்ற விலங்குகளை காட்டிலும் இருக்கும். அந்த வகையில் காண்டாமிருகம் மற்ற விலங்குகளை காட்டிலும் செயல்பாடுகளிலும், உருவத்திலும் பெரிய வித்தியாசத்தை உடையது. பார்ப்பதற்கு கரடு முரடாகவும், எளிதில் பயத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதன் உருவ அமைப்பு இருக்கும். 



அந்த வகையில், உலகின் மூத்த காண்டாமிருகமாக இருந்து வந்த 57 வயதான பாஸ்டா என்ற காண்டாமிருகம் நொராக்கோ நகரில் உள்ள பூங்காவில் தற்போது உயிரிழந்துள்ளது. காண்டாமிருகத்தின் ஆயுட்காலம் 35லிருந்து 43 ஆண்டுகளாக இருந்தாலும், இந்த காண்டாமிருகம் 57 வயது வரை உயிர் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.  
 

 

சார்ந்த செய்திகள்