Skip to main content

மரணத்திற்கு பின் மனிதன் உணர்வது என்ன?- செத்துப்பிழைத்தவள் தரும் விளக்கம்!!

Published on 02/09/2018 | Edited on 04/09/2018

 

soul

 

 

 

மரணம் எனும் உயிர் பிரிதலின் பிறகு என்ன நிலையை மனிதன் அடையக்கூடும் என பல்வேறு ஆராய்ச்சிகள் விவாதங்கள் ஆங்கங்கே நடந்துகொண்டிருக்கும் வேளையில் மரணம் எப்படிபட்டது மரணத்தை உணரும் தருணம் எப்படி இருக்கும் என்று புதுவிளக்கம் கொடுத்துள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்.

 

ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணான மிச்சைலி எல்மேன் என்பவருக்கு அவருடைய 11-வது வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த மூளை அறுவை சிகிச்சையின் பொழுது சில மணித்துளிகள் அவரது உயிர் பிரிந்ததாகவும் அதனை அவர் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்போது தான் கட்டிலில் படுத்திருந்தபடியே சில அடி உயரத்திற்கு மிதந்ததாக கூறிய மிச்சைலி எல்மேன் அந்த தருணம் மிக அமைதியாக இருந்ததாகவும் மரணம் என்பது அமைதியானது எனவே மரணத்தைக்கண்டு யாரும் அஞ்சவேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்