Skip to main content

ஒரேயொரு பள்ளிச் சிறுமிக்காக மட்டும் நின்று செல்லும் ரயில்கள்!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜப்பான் ரயில்களின் கதவுகள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக திறந்தே வைக்கப்பட்டிருந்தது நெகிழ்வான செய்தியாக வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதேபோல், ஒரேயொரு சிறுமி பள்ளி செல்வதற்காக ரயில் நிறுத்தம் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்வு அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Train

 

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் - மர்மான்ஸ்க் இடையே செல்லும் ரயில்கள் இனி ஒரேயொரு பள்ளிச் சிறுமிக்காக நிறுத்தப்படும் என்ற அந்த அழகிய செய்தி, ரஷ்யாவின் குடோக் செய்தித்தாளில் வெளியானது.

 

அந்த செய்தியில், ‘கரீனா கோஸ்லோவா எனும் 14 வயது சிறுமி, போயகொண்டா எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்திலிருந்து நகரத்திற்கு சென்று படித்து வந்துள்ளார். சில சமயங்களில் தன் பாட்டி துணையுடனும், சில சமயங்களில் தனிமையிலும் அவள் பயணிக்க வேண்டி இருக்கும். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பயணத்திற்காக அந்த சிறுமி ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை செலவிட வேண்டி இருந்தது. சரியாக நேரத்தைக் கடைபிடிக்காவிட்டால் அன்று விடுமுறையாகி விடும் நிலையும் இருந்துள்ளது.

 

இதுகுறித்து கரீனாவின் தாயார் ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டதை அடுத்து, அந்த சிறுமிக்காக மட்டும் போயகொண்டா கிராமத்தில் ரயில்கள் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை சிறப்பு நிறுத்தமாக கணக்கில் கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருப்பது அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்