Skip to main content

இலங்கையுடன் நட்புறவு;  "மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது" - இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த சீனா!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

INDIA - SRILANKA

 

இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில், சீனா பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்து வருகிறது அதேபோல் இலங்கையின் துறை முகங்களிலும் சீனா முதலீடு செய்து வருகிறது. இது இலங்கையை பெருங்கடனில் சிக்க வைத்து, அந்தநாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சீனாவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீனாவின் கரங்களுக்குள் இலங்கை சிக்குவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் என கருதப்படுகிறது.

 

இந்தநிலையில் இலங்கையின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தமிழகத்திற்கு அருகே இருக்கும் பகுதிகளில் மின்சக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கப்பட்டது, இதற்கு இந்தியா, இலங்கை அரசிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மூன்றாவது தரப்பால் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கவலையின் காரணமாக, மின்சக்தி திட்டத்தை ரத்து செய்வதாக சீன தூதரகம் அண்மையில் அறிவித்தது.

 

இந்தசூழலில் சீனா, இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது அவர், "சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கிறது. இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்கும் உதவுகிறது. இருநாடுகளின் நட்புறவு எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. எந்த மூன்றாம் தரப்பினரும் இதில் (இலங்கை - சீனா நட்புறவில்) தலையிடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்