Skip to main content

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்; பழசை கிளறாதீர்கள்- இலங்கை ராணுவ தளபதி...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

கடந்த 2009 ஆம் ஆண்டு போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர்.

 

mahesh

 

இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, "எத்தகைய விசாரணையையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எதற்கும் நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. இலங்கை நீதிமன்றமே விசாரணை நடத்தலாம். அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இதுதான் உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் இல்லை. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள்" என கூறினார். அவரின் இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பை பெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்