Skip to main content

நேரடி ஒளிப்பரப்பின் போது சீறிய மலைப்பாம்பு... அதிர்ச்சி அடைந்த பெண் நிருபர்!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

ஆஸ்திரேலியா நாட்டில் செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபரின் மைக்கை மலைப்பாம்பு ஒன்று கடித்த நிகழ்வு வைரல் ஆகி வருகின்றது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நியூஸ் சேனல் 9 நியூஸ்.  இந்த தொலைக்காட்சிகளில் பாம்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக விஷத்தன்மை இல்லாத ஒரு பாம்பை பெண் நிருபர் ஒருவரின் தோளில் வைக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
 

kl



நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் போது நிருபரின் மேல் இருந்த மலைப்பாம்பு திடீரென சீறத் தொடங்கியது. மூன்று முறைக்கு மேல் சத்தம் எழுப்பிய பாம்பு நிருபரின் கையில் இருந்த மைக்கினை கொத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நிருபர் பயத்தில் செய்வதறியாது திகைத்தார். பின் சுதாரித்துக்கொண்ட அவர் முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி விட்டே பாம்பை கீழே இறக்கி விட்டார். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது. 
 

 

சார்ந்த செய்திகள்