Skip to main content

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மகனைப் பார்க்க 17ஆயிரம் கிமீ சைக்கிளில் பயணித்த பெற்றோர்!

Published on 16/02/2018 | Edited on 16/02/2018

தங்கள் மகனின் கனவு நிறைவேறப் போகும் தருணத்தைக் காண, மிக நீண்ட, கடினமான பயணத்தை மேற்கொண்ட பெற்றோரின் அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஹூவிலர். இவரும் இவரது மனைவி ரீட்டா ரூட்டிமனும் சேர்ந்து தென் கொரிய நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தங்கள் மகனைக் காண 17 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர். அதுவும் சைக்கிளில்.

 

parents

 

இவர்களது மகன் மிஸ்கா கேஸ்ஸர் ஒரு பனிச்சருக்கு வீரர். 26 வயதாகும் இவருக்கு நான்கு வயதிலிருந்தே ஒலிம்பிக்கில் விளையாடும் லட்சியம் இருந்துள்ளது. தென் கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தேர்வான அவருக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை போட்டி இருந்துள்ளது. அதற்கு முன்பாக அங்கு விரைந்த அவரது பெற்றோர், தங்கள் மகனை வாழ்த்தி அனுப்பிய தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சென்ற வருடம் பிப்ரவரி மாதமே சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பிய இவர்கள், கிட்டத்தட்ட 17,000 கிலோமீட்டர்கள் சைக்கிளிலேயே பயணித்துள்ளனர். 20 நாடுகளின் வழியாக இவர்களது பயணம் நீண்டிருக்கிறது. 

 

தங்கள் பயணம் குறித்து விளக்கும் ஹூவிலர், ‘சைக்கிளில் தினமும் பயணிப்பது கடினமானது. நாளடைவில் தாடி அதிகமானதால் சீன எல்லையில் என்னை அனுமதிக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து அங்கிருந்து கடந்தோம். திறந்தவெளிகளில் கூடாரம் அமைத்து தங்கினோம். பாமிர் நெடுஞ்சாலையில் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்தோம். இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பயணம் ஓயப்போவதில்லை. உலகைச் சுற்ற முடிவு செய்துவிட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்ட சுவிஸ்! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

The Swiss published the bank account details of Indians!

 

இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிற்கு வழங்கிவருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டும் சுவிஸ் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட தகவலை வெளியிட்டுள்ளது. 

 

இதன் மூலம், சுவிஸ் வங்கியில் இருக்கும், தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான பொருளாதார கணக்குகள் அடங்கிய தகவல் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் பரிமாற்றத்தில் இரகசியத்தன்மை காரணமாக மொத்த பணத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

குளிர்கால ஒலிம்பிக்; சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

mea

 

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாகச் சீனா கூறி வருகிறது.

 

இந்தநிலையில் சீனாவில் நாளை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ஒலிம்பிக் தீபம் ஏற்பட்டது. அதனை கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில் தலையில் காயமடைந்த சீன ராணுவத்தின் கமாண்டர் கி பேபவோ பயணித்தார்.

 

இந்தநிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் விதமாக, குளிர்கால ஒலிம்பிக்கை ராஜாங்க ரீதியிலாக புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "ஒலிம்பிக்கை அரசியலாக்க சீனா முடிவு செய்தது வருத்தம் அளிக்கிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்" எனத் தெரிவித்துள்ளது.