Skip to main content

தாய்க்காக மகனின் பாசப்போராட்டம்... உலகைக் கலங்க வைத்த சம்பவம்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

palestine son watches his mother from hospital window

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாய் உயிரிழப்பதற்கு முன்பு அவரை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக மருத்துவமனை ஜன்னலில் ஏறி தனது தாயைப் பார்த்த மகனின் புகைப்படம் இணையத்தில் பலரையும் உருக வைத்துள்ளது. 

 

பாலஸ்தீனத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பெய்ட் அவா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 73 வயதான ரஸ்மி சுவைதி என்பவர் ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது மகன் ஜிகாத் அல்-சுவைதி என்பவர் கவனித்து வந்துள்ளார். ஆனால், அண்மையில் ரஸ்மிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், நோய்ப் பரவும் அபாயம் உள்ளதால் அவரது மகனும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

 

உடல்நிலை மோசமடைத்த ரஸ்மி தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கையில் அவரை காணத் துடித்துள்ளார் மகன் ஜிகாத். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் விதிகளின்படி, அவரை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. இதனையடுத்து தனது தாய் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் பகுதியில் ஏறி அமர்ந்தவாறு தனது தாயைக் கண்ணீருடன் பார்த்துள்ளார் ஜிகாத். கடந்த வியாழக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி ரஸ்மி உயிரிழந்தார். இந்நிலையில், மகன் ஜிகாத் தனது தாயை ஜன்னலில் அமர்ந்தவாறு பார்க்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி பலரையும் கலங்க வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்