Skip to main content

தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
nawaz


ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் அதிபர்  நவாஸ் செரிபின் தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட அவருடைய மகள் மரியத்தின் தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

ஊழல் பணத்தில் லண்டனில் சொத்துக்களை வாங்கியுள்ளார் என்று இவரது மீதும் மற்றும் அவரின் குடும்பத்தார்களின் மீதும் குற்றச்சாட்டு வந்தது. அதனை தொடர்ந்து நவாஸ் செரிப்பின் பிரதமர் பதவி பறிபோனது. பின்னர், வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், நவாஸின் மருமகனுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 

கடந்த வாரம் நவாஸின் மனைவி காலமானதற்காக பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை நிறுத்திவைத்து, விடுதலை செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்