Skip to main content

அமேசான் தலைமை பொறுப்பிலிருந்து விலகும்  ஜெஃப் பெசோஸ்; அடுத்து செய்யப்போவது என்ன?

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

jeff bezos

 

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், தற்போது அந்த பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். உலகின் இரண்டாவது கோடீஸ்வரரான அவர், அமேசான் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

 

இதனையடுத்து அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி என்பவர் பதவியேற்கவுள்ளார். இவர் அமேசான் நிறுவனத்தின் வலைசேவை பிரிவு தலைவர் ஆவார்.

 

தனது 57வயதில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பைத் துறந்துள்ள ஜெஃப் பெசோஸ், அடுத்ததாக சுத்தமான காற்று, நீர், நிலம் ஆகியவற்றை அனைவருக்கும் சமமாக வழங்கும் செயல் திட்டமான எர்த் ஃபண்ட், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை ஆகியவை தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்