Skip to main content

தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்! - அதிர்ச்சித் தகவல்

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

ஈராக்கில் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்கள் தலையில் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் கடந்த 2014ஆம் ஆண்டு 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் என்னவாயினர் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில், இந்திய அரசு அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டது. 

 

பஞ்சாப் மாநில அமிர்தசரஸுக்கு கொண்டு வரப்பட்ட 7 பேரின் இறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அவர்கள் ஏழு பேருமே தலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த இறப்புச் சான்றிதழ்கள் கடந்த மார்ச் 28ஆம் தேதி பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரதகத்தால் கொடுக்கப்பட்டவை. ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள் 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வீட்டிற்கு கடைசியாக பேசியுள்ளனர். எனவே, அவர்கள் 15 முதல் 20ஆம் தேதிக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்