Skip to main content

ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் - ஜோ பைடன் ஆச்சர்யம்! 

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

swathi kamala

 

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது. இந்த விண்ணூர்தி செவ்வாய் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதோடு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்தனுப்பியது.

 

செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியைத் தரையிறக்கும் இந்தத் திட்டத்தில், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்ற பொறுப்பை இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸ்வாதி மோகன் ஏற்று திட்டத்தை வழிநடத்தினார். இந்நிலையில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘பெர்சவரன்ஸ்’ திட்டக்குழுவிற்கு காணொளி வாயிலாக பாராட்டு தெரிவித்தார்.

 

அப்போது ஸ்வாதி மோகனிடம் பேசிய அவர், "இது நம்ப முடியாத கௌரவம். மேலும் இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்" எனத் தெரிவித்தார். அப்போது அவர் உதாரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனக்கு உரை வடிவமைக்கும் வினய் உள்ளிட்டோரைக் குறிப்பிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்