Skip to main content

இன்ஸ்டாகிராம் நிர்வாகம் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Girl's parents sue over Instagram administration!

 

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்திற்கு தனது மகள் அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வரிசையில் இன்ஸ்டாகிராமும் உலகளவில் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் உள்ள தங்களது 11 வயது மகள், அதற்கு அடிமையாகிவிட்டதாகவும், இதனால் தங்களது மகள் சரியாக உணவு கூட உண்ணாமல் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிறுமியின் பெற்றோர் கவலைத் தெரிவித்துள்ளனர். 

 

சில சமயங்களில் தற்கொலை எண்ணமும், தங்கள் மகளுக்கு ஏற்பட்டிருப்பதாக அந்த பெற்றோர் கூறுகின்றன. தங்களது மகளின் இந்த நிலைமைக்கு இன்ஸ்டாகிராமை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி கலிஃபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

 

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அதிபர்கள், பிரதமர்கள், உலக நாடுகளின் தலைவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. 


 

சார்ந்த செய்திகள்