Skip to main content

எல்லாம் இழந்த எலான்; குருவிக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட சோகம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Elon Musk Lost Russ 15 Lakh Crore For Last Year guinness Record

 

உலக அளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்து உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதற்கான தொகையை செலுத்த தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளையும் விற்று வருகிறார் எலான். 

 

இந்நிலையில் 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்த எலானின் சொத்துமதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. இந்த மிகப் பெரிய சரிவையொட்டி உலக அளவில் பெரும் நஷ்டத்தை சந்தித்த மனிதன் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 

 

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜப்பான் தொழிலதிபர் மசயோஷி சன் 58.6 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற நிலையில், தற்போது அவரின் சாதனையை எலான் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்