Skip to main content

இந்தோனேசியாவில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

INDONESIA

 

இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியாத நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியிலிருந்து 1000 கிலோமீட்டருக்குள் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதற்கிடையே அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்