Skip to main content

பயன்பாட்டிற்கு வந்த கரோனா தடுப்பூசி!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020
covid 19

 

 

சீனாவில்  முதன்முதலாகப் பரவ ஆரம்பித்து, இன்று எல்லா நாடுகளுக்கும் பரவி உலகை ஆட்டிப்படைத்து வருகிறது கரானோ தொற்று நோய். இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் முயன்று வருகின்றன.

 

கரோனா தொற்றைத் தடுக்கும் தடுப்பூசி, பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்து நாடு, கரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் 90 வயதான மார்க்கெரட் கெனன் என்ற மூதாட்டிக்கு முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதியவர்களுக்கும், கரோனா முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 

உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுடன்  பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த தடுப்பூசியை, ஃபைசர் - பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்