மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. வைரஸ் நோயான இதற்கு 650 பேர் வரை பலியாகினர். இந்நிலையில் இதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் காரணமாக இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சீனாவில் பணியாற்றும் இந்திய பெண் ஒருவருக்கு இந்த நோய் தோற்று கண்டறியப்பட்ட நிலையில், தென் கொரியாவில் இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.