சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க சில நாடுகள் சீனாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்த நோய் தொற்று காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். 5200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் இந்த வாரத்தில் நடைபெற இருந்த பெரும்பாலான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை சீன அரசு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் நோய் தாக்குதல் வாய்ப்பு ஏற்படும் என்று சீன அரசு இதற்கு காரணம் கூறியுள்ளது.