Skip to main content

இஸ்ரேலைத் தொடர்ந்து இந்த நாட்டிலும் பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

chile

 

உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் அண்மையில் இஸ்ரேல் நாடு, பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்த தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இஸ்ரேலைத் தொடர்ந்து தற்போது லத்தின் அமெரிக்கா நாடான சிலியும் பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த தொடங்கியுள்ளது.

 

முதலில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும், பிறகு 55 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் இந்த நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது. 19 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிலி நாட்டில் இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அந்தநாட்டில் மூன்று வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சிலி நாட்டில் 11.3 மில்லியன் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
 

சார்ந்த செய்திகள்