உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்களின் காதலின் ஆழத்தை தங்களின் இணையர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக இந்த தினத்தை கொண்டாடி வருகிறார்கள். பூங்காக்கள், கடற்கரைகள் என அனைத்தும் இன்றைக்கு காதலர்களால் நிரம்பி வழிகின்றது. இதுவரை காதலிக்காதவர்களும், முரட்டு சிங்கிளாக இருப்பவர்களும் அவர்களை ஏக்கத்துடன் பார்க்கும் நாளாகவும் இது இருந்து வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவில் காதலில் தோற்றவர்களுக்காக ஒரு பார் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'பிரேக் அப்' பார் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பாரில் காதலில் தோற்ற ஆண்களும், பெண்களும் குவிந்து உற்சாகமாக தங்களின் காதல் பிரிவை கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் பாரில் கட்டுங்கடங்காத கூட்டம் உள்ளது. காதலில் தோற்றவர்கள் மன அமைதிக்காக இங்கே வரலாம் என்று பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.