Skip to main content

நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

Beirut blast updates

 

 

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர், 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

 

பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை இந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதால் கட்டிட இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிப்புக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை எனினும், ஆறு ஆண்டுகளாக துறைமுக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இதற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். நகரம் முழுவதும் மக்களின் அழுகுரல்களும், மருத்துவ வாகனங்களின் சைரன்களும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் சூழலில், இந்த விபத்து குறித்த காட்சிகள் இணையத்தில் பரவிக் காண்போரைப் பதறவைத்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்