கொலை வழக்கில் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் (8/3/2022) அன்று தண்டனைகள் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ப.பா.மோகன் கையிலெடுத்து போராடிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜூக்கு வாழ்நாளின் இறுதி மூச்சு வரை சிறையிலேயே இருக்கும்படியான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிணையோ, கருணை மனுவோ எதுவுமே குற்றவாளியால் பயன்படுத்த முடியாது என இவ்வழக்கை வாதாடி தண்டனை பெற்றுத்தந்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ் இன்று கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.