Skip to main content

கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!!

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

elephant

 

நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனங்கள் அதிகமாக கொண்டது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 

 

பெரும்பாலும் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. இந்நிலையில் காடுகளில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வருவதும் இப்பகுதிகளில் வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில் வன விலங்குகள் மனிதர்களையும் தாக்குவதோடு, விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.  இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் இருந்து வந்த காட்டு யானைகள் தற்போது நகர் புறங்களிலும் உலா வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுவது வாடிக்கையாகவே உள்ளது.

 

 

இன்று அதிகாலை கூடலூர் பகுதியை அடுத்த ஓவேலி கிராமத்தை சேர்ந்த  சரோஜினி என்ற பெண்மனி சீப்புரம் பேருந்து நிலைத்தியத்திற்கு செல்லும் போழுது, எதிர்பாராத விதமாக சுருளிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை எதிரே வந்துள்ளது. அப்போது காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியுள்ளார். ஆனால் யானை விடாமல் துரத்தி அப்பெண்மனியை தாக்கியுள்ளது. அவரின் அலறல்  சத்தத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் சத்தம்போட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

 

 

பின்னர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த சரோஜினியை உதகை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த கூடலூர் வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஒவேலி பகுதயில் காட்டு யானைகள் அதிக அளவில்  நடமாடுவதல் வன துறையினர் அவற்றை வனத்திற்குள் விட்டுமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்