Skip to main content

சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் ஏன்? சர்கார் படக்குழு விளக்கம்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

sarkar

 

சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது தொடர்பாக சர்கார் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. 

 

ஆளுங்கட்சியினர் நடத்தும் வன்முறையால் பார்வையாளர்களுக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. படம் பார்க்கவரும் பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது. ஆளுங்கட்சியினர் வன்முறையை தூண்டியதால் பாதுகாப்பு கருதி காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

பார்வையாளர்கள் உயிருக்கும், உடமைக்கும். திரையரங்குகளில் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் சர்க்கார் படக்குழு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்