Skip to main content

தினகரன், சசிகலாவை தவிர யார் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் சேர்த்துகொள்வோம்- அமைச்சர் ஜெயக்குமார்!!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

 

 Apart from Dinakaran and Sasikala, who will ask apologize, joint us; Minister Jayakumar !!

 

தினகரன், சசிகலா தவிர யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டுவந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.

 

மேலும் அவர் கூறுகையில்,

 

ஓபிஎஸ் தம்பி பற்றி தீவிரமாக விசாரித்துவிட்டோம். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் எனவே கட்சி தலைமை அவரை மீண்டும் சேர்த்து கொண்டது. மன்னிப்பு கேட்டுவிட்டதால் ஓ.ராஜாவை மீண்டும் சேர்த்துகொண்டோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசின் நிலையை உணர்ந்து பணிக்கு திருப்ப வேண்டும் எனவும் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்