Skip to main content

மகன்களுக்கு விபத்து நடந்த இடத்தில் தந்தைக்கும் விபத்து... பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Where the sons had an accident, the father also had an accident... Shocking CCTV footage

 

திருப்பூரில் சாலை விபத்தில் காயமடைந்த மகன்களை பார்க்கச்சென்ற தந்தையும் அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சகோதரர்களான அருண்குமார், சசிகுமார் இவர்கள் இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ராயர்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவலறிந்த அவர்களது தந்தை திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் மகன்களுக்கு விபத்து ஏற்பட்ட அதே பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தில் வாகனத்தை செலுத்தும்பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது. தற்பொழுது தந்தையும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறு காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த வாரம் அதே பள்ளத்தில் பள்ளி மாணவி ஒருவரும் விழுந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அந்த சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்